தாம்பரம்,--தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், உள்நோயாளிகள் பிரிவு இன்று முதல் மீண்டும் துவங்கப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.தாம்பரம் சானடோரியத்தில், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் கொரோனா காரணமாக மார்ச் 21ம் தேதி உள் நோயாளிகள் பிரிவு மூடப்பட்டது.தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று முதல் உள் நோயாளிகள் பிரிவு மீண்டும் இயங்க உள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், உள் நோயாளிகள் சேவை மீண்டும் துவங்க உள்ளது. முதற்கட்டமாக 50 படுக்கைகள் மட்டுமே செயல்பட உள்ளன.உள் நோயாளிகளாக சிகிச்சை பெற விரும்புபவர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை, இங்கு அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் வழங்க வேண்டும். அப்போது தான் தொடர்ந்து சிகிச்சை பெற முடியும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.