கந்துவட்டி, மீட்டர் வட்டி வசூலா; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
05:21


கோவை : 'கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளவர்களிடம் கந்துவட்டி, மீட்டர் வட்டி என்று விதவிதமாக வட்டி வசூலிக்கும் நபர்கள் மீது, கடும் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார்.



கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, பல்வேறு தரப்பினரும் கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக தொழில்துறையினர், சிறு, குறு நிறுவனங்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பொருளாதார ரீதியாக நெருக்கடியில் உள்ளனர்.இதனை பயன்படுத்தி வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள், தொழில் செய்யும் நபர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று, பணம் கொடுத்து வசூலிக்கின்றனர். இவ்வாறு கொடுக்கும் பணத்துக்கு கந்துவட்டி, மீட்டர் வட்டி என்று விதவிதமாக வசூலித்து வருகின்றனர்.கடன் பெற்றவர்கள், வட்டியையும், தவணையையும் அடுத்தடுத்து திருப்பி கொடுக்க தவறும்போது, மனிதாபிமானம் இல்லாமல் கடுமையான வார்த்தைகளை பேசுவதும், அத்துமீறல்களில் ஈடுபடுவதும் நடக்கிறது.இதனால் ஒரு சிலர், விபரீதமான முடிவுகளை எடுத்து விடுகின்றனர். இதுபோன்ற புகார்கள் அதிகரித்து வருவதால், கந்துவட்டி கும்பலுக்கு மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் வெளியிட்டுள்ள அறிக்கை:கந்துவட்டி, மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்து, வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.கந்துவட்டி, மீட்டர் வட்டி பிரச்னைகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், முறையாக போலீஸ் ஸ்டேஷன்களில் எவ்வித தயக்கமும் இல்லாமல் புகார் அளிக்க வேண்டும்.ஸ்டேஷனுக்கு நேரில் செல்ல இயலாதவர்கள், குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியே செல்ல தயங்குபவர்கள், கந்துவட்டி கும்பல் குறித்த விபரங்களை அறிந்தவர்கள், 94981 81213 என்ற மொபைல்போன் எண் வாயிலாகவும், 81900 00100 என்ற வாட்ஸ்ஆப் மூலமாகவும் தெரிவிக் கலாம்.தகவல் தரும் பொதுமக்கள் பற்றிய விபரம், ரகசியமாக பாதுகாக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X