21,612 பேர்! இரு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டி நிறைவு நாளில் வேட்பு மனு தாக்கல் தீவிரம்-
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
05:24

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.



காஞ்சிபுரம் மாவட்டத்தின் நான்கு பதவிகளுக்கான மொத்த இடமான 2,321 இடங்களுக்கு, 8,610 பேரும், செங்கல்பட்டின், 3,208 இடங்களுக்கு, 13 ஆயிரம் பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், அக்., 6 மற்றும் 9ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், 15ம் தேதி துவங்கி, நேற்றுடன் நிறைவடைந்தது.



முதல் நான்கு நாட்கள், மந்தமாகவே மனு தாக்கல் நடந்தது; பல ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அதன் பின், கடந்த மூன்று நாட்களாக ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள், மனு தாக்கல் செய்தனர்.ஸ்தம்பிப்புபடப்பையில் உள்ள குன்றத்துார் ஒன்றிய அலுவலகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள், சுயேச்சைகள் அதிகளவில் குவிந்தனர். இதனால் அலுவலகம் அமைந்துள்ள சாலையில் நெரிசல் ஏற்பட்டது.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மனு தாக்கல் செய்ய, தற்போதைய ஸ்ரீபெரும்புதுார் தொகுதி காங்., - எம்.எல்.ஏ., செல்வபெருந்தகையும், அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ., பழனியும் வந்திருந்தனர். இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி, நலம் விசாரித்துக் கொண்டனர்.சிட்லபாக்கத்தில் உள்ள பரங்கிமலை ஒன்றிய அலுவலகத்தில், மேள, தாளம், ஆளுயர மாலை என, மனுதாக்கலின் போது, கட்சியினர் விதியை மறந்து, சமூக இடைவெளியின்றி அமர்க்களப்படுத்தினர்.காஞ்சிபுரம் ஒன்றிய அலுவலகத்தில், தி.மு.க., சார்பில் கவுன்சிலர் பதவிக்கு பலர் மனு தாக்கல் அளிக்க வந்ததால், உள்ளே செல்வதில் தள்ளுமுள்ளு நடந்தது. வேட்பாளர்கள், பகுதி மக்களை உடன் அழைத்து வந்ததால், சிறுகாவேரிபாக்கம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகம், பஸ் நிலையம், ரவுண்டானா பகுதி அருகே இருப்பதால், நேற்று குவிந்த வேட்பாளர்கள், ஆதரவாளர்களால், செங்கல்பட்டு - திருப்போரூர் சாலையில் நெரிசல் ஏற்பட்டது. அரசியல் கட்சியினர் கூட்டத்தால் சாலையே ஸ்தம்பித்து களேபரமானது.பலரும் மேளதாளங்களுடன் பட்டாசு வெடித்து, நுாற்றுக்கணக்கானோரை வாகனங்களில் அழைத்து வந்தனர். போலீசார், தேர்தல் விதிகளை விளக்கி, கூட்டத்தை தடுத்து நிறுத்த பெரும்பாடுபட்டனர்.மதியம், 12:00 மணி முதல் 1:30 மணி வரை ராகு காலம் என்பதால், சில வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய காத்திருந்தனர்.ஆய்வுதிருக்கழுக்குன்றத்தில் அ.தி.மு.க., வேட்பாளர்கள், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக வந்து வேட்பு மனு அளித்தனர்.மதுராந்தகம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியங்களில், ஆறு நாட்களை விட நேற்று, அதிக அளவிலான நபர்கள் மனு தாக்கல் செய்தனர்.



மதுராந்தகத்தில் ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு போட்டியிட வந்த சிலர், விதிமுறைகளுக்கு மாறாக பலர் உள்ளே செல்ல அனுமதி கேட்டதால், போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வண்டலுார் டி.எஸ்.பி., சிங்காரவேலன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.கூட்டத்தை கட்டுப்படுத்த, போலீசார் இரு சோதனைச்சாவடி அமைத்திருந்தனர். அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் பார்வையாளர் சம்பத், தேர்தல் அலுவலர்களிடம் வேட்பு மனு தொடர்பாக ஆய்வு செய்தார்.வேட்புமனுக்கள் மீதான கூர்ந்தாய்வு அந்தந்த ஒன்றியங்களில் இன்று நடைபெற உள்ளது.



வரும் 25ம் தேதி, வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னே, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.பரங்கிமலையில் 1,281 பேர்!பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில், ஒட்டுமொத்தமாக, மாவட்ட கவுன்சிலருக்கு 36 பேர், ஒன்றிய கவுன்சிலருக்கு 97 பேர், கிராம ஊராட்சி தலைவருக்கு, 126 பேர், கிராம வார்டு உறுப்பினருக்கு, 1,022 பேர் என, ஒன்றியத்திலுள்ள, 179 பதவிகளுக்கு, 1,281 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.


நமது நிருபர் குழு -


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X