விருகம்பாக்கம்-விருகம்பாக்கத்தில், 84 லட்சம் ரூபாய் மதிப்பில், பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.கோடம்பாக்கம் மண்டலம், 128வது வார்டு, விருகம்பாக்கம், வேம்புலியம்மன் கோவில் தெருவில், மாநகராட்சி பூங்கா துறை சார்பில், 84 லட்சம் ரூபாய் செலவில், 18 ஆயிரத்து, 309 சதுர அடி பரப்பளவில் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இந்த பூங்காவில், நடைபாதை, பசுமை பகுதி, குழந்தைகள் விளையாட்டு பொருட்கள், திறந்த வெளி உடற்பயிற்சி கூடம், எட்டு வடிவிலான நடைபயிற்சி பாதை உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. பூங்காவின் உள்பகுதியில் உள்ள சுவர்களில், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் கலைகள் குறித்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை, அப்பகுதி மக்களை கவரும் விதமாக உள்ளது.இப்பூங்கா பணிகள், இன்னும் சில வாரங்களில் நிறைவு பெற்று, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.