அண்ணா நகர்-நம் நாளிதழ் செய்தியை அடுத்து, குப்பை கிடங்காக இருந்த, அண்ணா நகர் மேற்கு பஸ் நிலையம் முழுதும் நேற்று துாய்மைப்படுத்தப்பட்டது.அண்ணா நகர் மண்டலம், திருமங்கலம் அருகே, மேற்கு அண்ணா நகர் பஸ் நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து, 24ஏ இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதே சமயம், பிராட்வே, திருவான்மியூர், வி.இல்லம், கோயம்பேடு, பாடி, அம்பத்துார் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள் நின்று செல்கின்றன.பஸ்கள் பழுது பார்க்கும் நிலையமும் இங்கு செயல்படுகிறது.போதிய பராமரிப்பின்றி படுமோசமாக காட்சி அளித்த இந்த பஸ் நிலையம் குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சென்னை மாநகராட்சியினர், குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பையை அகற்றி, பஸ் நிலையம் முழுதும் துாய்மைப்படுத்தினர்.