சூளைமேடு சிக்னலில் இருந்து, ஹாரிங்டன் சாலையை நோக்கி செல்லும் வழியில், சூளைமேடு இணைப்பு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இருபுறங்களையும் கண்காணிப்பதற்காக, கேமராக்கள் பொருத்தப்பட்டன. சில நாட்களுக்கு முன், சேதமடைந்திருந்த கேமராக்கள் அகற்றப்பட்டன. தற்போது, அங்கிருந்த கம்பமும் அகற்றப்பட்டு, பாலத்தின் நடைபாதையில் போடப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதே பகுதியில் மீண்டும் கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.