கோடம்பாக்கம்-வருமான வரித்துறை ஆய்வாளர் வீட்டில் புகுந்து, மொபைல் போன் திருடிய நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.கோடம்பாக்கம், விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்தவர் அஸ்வின், 25; வருமான வரித்துறை ஆய்வாளர். இவர் தன் நண்பர்களுடன் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் கதவை திறந்து வைத்து துாங்கியுள்ளார்.காலையில் எழுந்து பார்த்தபோது, மொபைல் போன் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து கோடம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.