கோடம்பாக்கம் மண்டலம், வடபழநியில் குமரன் காலனி பிரதான சாலை மற்றும் நெற்குன்றம் சாலை உள்ளது. இச்சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.இந்த இரு சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளன. இதில், குமரன் காலனி பிரதான சாலை 'மில்லிங்' செய்யப்பட்டு, தார்ச்சாலை போடப்படாமல் உள்ளது.இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரண்டு சாலைகளையும் சீரமைக்க, மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.