3வது அலைக்கு தப்புமா திருவொற்றியூர்? கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதில் அலட்சியம் | சென்னை செய்திகள் | Dinamalar
3வது அலைக்கு தப்புமா திருவொற்றியூர்? கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதில் அலட்சியம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
05:38

திருவொற்றியூர்-தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல், கொரோனா விதிகளைப் பின்பற்றாமல் அலட்சியம் காட்டுபவர்களால், திருவொற்றியூர் மூன்றாவது அலைக்கு தப்புமா என்ற அச்சம் எழுந்துள்ளது.சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில், 14 வார்டுகள் உள்ளன. இங்கு மீனவ குடியிருப்புகள், குடிசைப் பகுதி, குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் அதிகம் உள்ளன.முதல் மற்றும் இரண்டாம் அலை கொரோனா தொற்று பரவல் விகிதம், இம்மண்டலத்திலும் கணிசமாக உயர்ந்தது. குறிப்பாக, இரண்டாம் அலையின் போது உயிரிழப்புகள் அதிகரிக்கவே, பட்டினத்தார் சுடுகாடில் எரியூட்ட, உடல்கள் காத்திருந்த காட்சிகளும் அரங்கேறின.இந்நிலையில், திருவொற்றியூர் மண்டலத்தைச் சேர்ந்த மக்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதாக, அதிகாரிகள்வேதனை தெரிவிக்கின்றனர்.மிக குறைவுஇதில், 18 வயதிற்கு மேற்பட்ட 2.62 லட்சம் பேரில், 1.32 லட்சம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.முதல் 'மெகா' தடுப்பூசி முகாமின் போது நிர்ணயித்த இலக்கைக் காட்டிலும் குறைவானவர்களே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.அதன்படி, 22 ஆயிரத்து 400 பேரில், வெறும் 9,440 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது, 42.1 சதவீதம். இரண்டாவது 'மெகா' தடுப்பூசி முகாமில், 16 ஆயிரத்து 800 பேருக்கு இலக்கு நிர்ணயித்து, 8,574 பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. இது, 51 சதவீதம் மட்டுமே.மண்டல அதிகாரி, சுகாதார அதிகாரிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும், குடிசைப் பகுதி, மீனவ கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தடுப்பூசி செலுத்துவதில் அறியாமை, அலட்சியம் காட்டுவதால் இன்னும், 1.30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தவில்லை.தப்புவது கடினம்தவிர, மண்டலத்தில் முக கவசம் அணியாதோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.மாநகர பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் என, அரசு ஊழியர்கள் துவங்கி பயணியர், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பாதிக்கும் மேற்பட்டோர் முக கவசம் அணிவது கிடையாது.பேருந்துகள், ரேஷன் கடைகள், வங்கிகள், பள்ளிகள் என, பொது இடங்களில் சமூக இடைவெளியின்றி மக்கள் அதிகம் கூடுகின்றனர்.இதே நிலை நீடித்தால், மூன்றாம் அலைக்கு திருவொற்றியூர் தப்புவது பெரும்பாடாகி விடும் என, பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X