மாதவரம்-நடை பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம், நகை பறித்தவர் கைதானார்.சென்னை மாதவரம் பால்பண்ணை போலீசார், நேற்று முன்தினம் இரவு, மஞ்சம்பாக்கம் 200 அடி சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் தாம்பரம், கடப்பேரி பகுதியைச் சேர்ந்த ஜெயந்திநாதன், 30, என்பதும், கடந்த மாதம், மாதவரம் தோட்டக்கலை பூங்கா அருகே, நடை பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம், 5 சவரன் நகை பறித்ததும் தெரிந்தது.அவரை கைது செய்த போலீசார், நகையை பறிமுதல் செய்தனர்.