ஆக்கிரமிப்பாளர்கள் மறியல் ஈஞ்சம்பாக்கத்தில் பரபரப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
05:44

ஈஞ்சம்பாக்கம்- -ஈஞ்சம்பாக்கத்தில், ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு நீதிமன்ற உத்தரவு படி 'நோட்டீஸ்' வழங்க உள்ளதாக வெளியான தகவலை அடுத்து, ஆக்கிரமிப்பாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 196 வது வார்டுக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் அரசுக்கு சொந்தமாக, கைவேலி இடம், 160 ஏக்கர் பரப்பில் உள்ளது.அதை, உள்ளூர் அரசியல்வாதிகள் கபளீ கரம் செய்து, சொற்ப விலைக்கு பொதுமக்களிடம் விற்பனை செய்துள்ளனர். தற்போது, 1,500க்கும் மேற்பட்டோர், ஆக்கிரமிப்பு இடத்தில் வீடு கட்டி உள்ளனர்.அந்த இடத்தை மீட்கக் கோரி, ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களை துல்லியமாக கணக்கெடுக்க நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.இதையடுத்து, சோழிங்கநல்லுார் தாசில்தார் தலையில், 40 பேர் கொண்ட குழுவினர், கணக்கெடுப்பு பணியை நடத்தினர்.இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுபடி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு, வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்குவதாக இருந்தது. ஆனால், தேர்தல் பணி காரணமாக அத்திட்டம் நேற்று கைவிடப்பட்டது.நோட்டீஸ் வழங்க உள்ள தகவல் அறிந்த நுாற்றுக்கணக்கான ஆக்கிரமிப்பாளர்கள் ஒன்று கூடி, ஈஞ்சம்பாக்கம், திருவள்ளுவர் சாலையில் நேற்று, மறியலில் ஈடுபட்டனர்.நீலாங்கரை உதவி கமிஷனர் சுதர்ஷன், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் ஆகியோர் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப் பட்டனர்.ஆக்கிரமிப்பாளர்களை, போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை, 20க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் சந்தித்து பட்டா கோரி மனு அளித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X