சாலையில் தேங்கிய மழை நீரால் அவதி | சென்னை செய்திகள் | Dinamalar
சாலையில் தேங்கிய மழை நீரால் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
05:44

சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம், பெத்தேல்நகரில், நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நகருக்கான பிரதான சாலையாக, 2வது தெரு அமைந்துள்ளது.இச்சாலையில், தினமும் நுாற்றுக்கணக்கான இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.இச்சாலை முழுதும் போக்குவரத்திற்கு லாயக்கற்று குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சிறு மழை பெய்தாலும் சாலையில் உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி, குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள், சாலையில் செல்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. பருவமழை துவங்கும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், இப்பகுதியில் மழை நீர் தேக்கம் அதிகரித்து, குடியிருப்பு பகுதிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்குள் மழை நீர் புகும் அபாயம் ஏற்படும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X