பல்லாவரம்--பல்லாவரத்தில், மீன் மார்க்கெட்டிற்கு சென்று திரும்பிய பெண்ணிடம், 3 சவரன் செயினை பறித்து தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பழைய பல்லாவரம், பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பவித்ரா, 25. மீன் வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று காலை, ஜமீன் ராயப்பேட்டையில் உள்ள, மீன் மார்க்கெட்டிற்கு, இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கிருந்து, மீன் எடுத்து திரும்பினார். மல்லிகா நகர் வழியாக சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பவித்ரா கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்து தப்பினர். இது குறித்து, பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.தென் சென்னை/