வேளச்சேரி-வேளச்சேரியில், வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தென்சென்னை பகுதி யில், மழைக்காலங்களின் போது, வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும். 2015ம் ஆண்டு வெள்ள பாதிப்பிற்கு பின், ஆண்டு தோறும் மழை நீர் வடிகால் துார் வாரி சீரமைக்கப்பட்டு வருகின்றன.இந்தாண்டு பருவமழைக்கு முன்னதாக, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சியினர் சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேற்று, வேளச்சேரி, விஜயநகர் பகுதிகளில், வெள்ளத் தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.பின், குடியிருப்பு பகுதி களில் மழை நீர் உட்புகாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.