கொசுப்புழு ஒழிப்பு பணியாளர் கூண்டோடு நீக்கம் நகராட்சி கமிஷனர் மீது குற்றச்சாட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
05:57


திருப்பூர் : பணியில் இருந்து திடீரென நிறுத்திவிட்டதாக, காங்கயம் நகராட்சி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.காங்கயம் நகராட்சியில், தினக்கூலி, 324 ரூபாய் என்ற அடிப்படையில், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், 40 பேர், பணியாற்றி வந்தனர். இவர்களை, பணியில் இருந்து நகராட்சி கமிஷனர் நீக்கியுள்ளதாக, நேற்று கலெக்டரிடம் முறையிட வந்திருந்தனர்.



இது குறித்து, கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கூறுகையில், 'காங்கயம் நகராட்சி கமிஷனர் முத்துக்குமார், சக்தி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு, கோலமிடுவது, கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார். மீறினால், வேலையை விட்டு நிறுத்தி விடுவதாகவும் மிரட்டுகிறார். எங்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும்; உரிய விசாரணை நடத்த வேண்டும்,' என்றனர்.கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களின் குற்றச்சாட்டு குறித்து, நகராட்சி கமிஷனர் முத்துக்குமார் கூறியதாவது:கடந்த சில வாரங்கள் முன், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், நகராட்சிகள் நிர்வாக இயக்குனர், ஆய்வு நடத்தினார். கடந்த ஆட்சிக்காலத்தில், விதிமுறையை மீறி பணி நியமனம் செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.அதன்படி, 40 பேரையும் பணியில் இருந்து நிறுத்தியுள்ளோம். மீண்டும் பணியில் சேர்க்க வேண்டுமென, சிலர் என்னை சந்தித்து மிரட்டினர். விதிமுறைப்படி செய்துள்ளதாக தெளிவாக கூறிவிட்டேன். அதற்காக, பொய் குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்த விவகாரம் குறித்து, கலெக்டர் வினீத்திடம் கேட்டதற்கு, ''புகார் குறித்து, விசாரித்து அறிக்கை அளிக்க பெண்கள் பாதுகாப்பு கமிட்டிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X