தொழில் துறையினருக்கு கடன் வழங்க தயார்! 'டெக்பா' நிகழ்ச்சியில் 'சிட்பி' பொது மேலாளர் உறுதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
05:59


திருப்பூர் : 'தொழில் துறையினருக்கு தேவையான கடன்களை வழங்க, 'சிட்பி' தயாராக உள்ளது'' என, சிட்பி (இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி) பொதுமேலாளர் ரவீந்திரன் பேசினார்.



திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) 17ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், இடுவம்பாளையத்தில் நேற்று நடந்தது. இதற்கு சங்க தலைவர் ஸ்ரீகாந்த் தலைமைவகித்தார். கவுரவ ஆலோசகர் பழனிசாமி, துணைதலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.இணை செயலாளர் மரியவிக்டர் வரவேற்றார். பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார், பொருளாளர் திருமூர்த்தி வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார். 'டெக்பா' டைஸ் அண்ட் கெமிக்கல் வர்த்தக நிறுவன இயக்குனர் வசந்தகுமார், புதிய இங்க் தயாரிப்பு குறித்து விளக்கம் அளித்தார்.'சிட்பி' பொதுமேலாளர் ரவீந்திரன் பேசியதாவது:'சிட்பி'க்கு, மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கடன் வழங்குவதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தொழில் துறையினருக்கு தேவையான கடன்கள் வழங்க எப்போதும் தயாராக உள்ளோம். கடன் கேட்டு வங்கியின் வாசலுக்கு தொழில்முனைவோர் வரத்தேவையில்லை.கடன் வழங்குவதற்காக, தொழில்முனைவோரை நோக்கி வங்கிகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது, வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 6.68 சதவீதம் என்கிற குறைந்த வட்டியில், சிட்பி கடன் வழங்கிவருகிறது.வரும் 2022 மார்ச் வரை, இந்த வட்டி விகித குறைப்பு தொடரும். அதன்பின், வட்டி உயர்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழில்துறையினர், மெஷின் கொள்முதல் திட்டங்களை உடனடியாக செயல்படுத்துவது பயன்தரும்.இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டத்தில், பிரின்டிங் நிறுவனங்கள், அனைத்து ரசீதுகளிலும், ஆர்பிட்ரேசன் கவுன்சில் விதிமுறைகளை தவறாமல் அச்சிட வேண்டும். எத்தகைய பிரின்டிங் கழிவுகளையும், பொது இடங்களில் கொட்டக்கூடாது. ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, குறித்த காலத்துக்குள் பிரின்டிங் செய்து கொடுக்க வேண்டும்.மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. லாபத்தை விட்டுக்கொடுத்து ஆடைகளில் பிரின்டிங் செய்வதை தவிர்க்க வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.டெக்பா இணைச் செயலாளர் இதயதுல்லா நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X