100 ஏக்கர் கண்மாய் ஆக்கிரமிப்பால் 30 ஏக்கரானது | மதுரை செய்திகள் | Dinamalar
100 ஏக்கர் கண்மாய் ஆக்கிரமிப்பால் 30 ஏக்கரானது
Added : செப் 23, 2021 | |
Advertisement
 

பேரையூர் : போடி அருகே சாப்டூர் கண்மாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீரை சேமிக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர்.

சேடபட்டி ஒன்றியம் சாப்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட கடம்பன்குளம் கண்மாய் 100 ஏக்கரில் அமைந்துள்ளது. இக்கண்மாயில் 1000 ஏக்கர் நேரடியாகவும், 1500 ஏக்கர் மறைமுக பாசன வசதி பெற்று வந்தன. தற்போது இக்கண்மாய் தனிநபர்கள் ஆக்கிரமிப்பால் 30 ஏக்கர் அளவிற்கு கூட இல்லாத அளவிற்கு சுருங்கி உள்ளது. இதனால் மழை காலங்களில் நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் செய்ய முடியாத நிலையில் சிரமம் அடைந்து வருகின்றனர்.

கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றி, நீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயி சந்திர மோகன்: 20 ஆண்டுகளாக கண்மாய் துார்வாரவில்லை. இதனால் கண்மாய் மேடாகி விட்டது. 4 மடைகளும் சேதமாகி கிடக்கிறது. இதற்கு தண்ணீர் வரத்து ஓடையும் ஆக்கிரமிப்பில் உள்ளது. பழையூர், அழகாபுரி, சாப்டூருக்கு இக்கண்மாய் பயன்படும் வகையில் இருந்தும் எந்த அதிகாரியும் கண்டு கொள்ளவில்லை.வணங்காமுடி: கடம்பன்குளம் கண்மாய், ரெட்டி குளம், பல்லுாரணி, பச்சமலையப்பன் கோவில் ஊரணி, சின்னகோவில் ஊரணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவை ஆக்கிரமிப்பில் உள்ளது. சதுரகிரி மலையிலிருந்து வரக் கூடிய அனைத்து வரத்து கால்வாய்களை காணவில்லை.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X