உசிலம்பட்டி : உசிலம்பட்டி சிக்கம்பட்டி மாயன்நகரில் பிற்பட்டோர் நலத்துறை மூலம் மருத்துவர் சமுதாயத்திற்கு வீட்டு மனை வழங்க 3.25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளனர்.
இந்த நிலத்தை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நில அளவீடு செய்யவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்று நிலம் அளவிடும் பணி உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., (பொறுப்பு) நடராஜன், டி.எஸ்.பி., நல்லு, தாசில்தார் விஜயலட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சிறப்பு தாசில்தார் சிவக்குமார், வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.