திருமங்கலம் : மதுரை மாவட்ட கவுன்சில் 16 வது வார்டு கவுன்சிலராக இருந்த அய்யப்பன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., ஆனதை தொடர்ந்து கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார். அக்.,9ல் நடக்க உள்ள இப்பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க, ஜெயராஜ், அ.தி.மு.க., தமிழழகன் உட்பட 17 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (செப்.,23) மனு பரிசீலனை நடக்கிறது. செப்.,25 மனு வாபஸ் பெறும் கடைசி நாள்.