திருப்பூர் : இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த அழைப்பு விடுக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில் தற்போது அனைத்து பகுதியிலும் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது.
இதில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.கடந்த ஒரு மாதமாக தேவையான அளவு தடுப்பூசிகள் வரத்துவங்கிய நிலையில், தடுப்பூசி முகாம் எந்த தடையுமின்றி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோரில், பலர் இன்னும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.இது போல் இரண்டாம் தவணை தடுப்பூசி போட வராமல் உள்ளோரை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் உள்ள உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பூசி குறித்த டெலி கவுன்சிலிங் சென்டர் மூலம் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டு, 2வது தவணை செலுத்தாமல் உள்ள நபர்களின் மொபைல் எண்களில் இங்கிருந்து ஊழியர்கள் தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் தெரிவித்து வருகின்றனர்.