ரூ.பல லட்சம் மதிப்புள்ள நிலம் சங்கங்களுக்கு தாரைவார்ப்பு; கேள்விக்குறியான போக்குவரத்து கழக திட்டப்பணிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
06:10

மதுரை: மதுரை பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் விதிமீறி தொழிற்சங்கங்களுக்கு அலுவலகம் கட்ட, பல லட்ச ரூபாய் மதிப்பிலான நிலங்களை தாரைவார்ப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.



இங்கு 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உள்ளன. ஆனால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்கள் மட்டுமே துரிதமாக செயல்படுகின்றன. பதிவு பெற்ற முக்கிய சங்கங்களுக்கு போக்குவரத்து கழக அலுவலகத்திற்குள் 10க்கு 10 அளவில் அறைகள் ஒதுக்கப்படுவது பல்வேறு மண்டலங்களில் நடைமுறையில் உள்ளது. ஆனால் மதுரையில் அலுவலக கட்டடம் கட்ட ரூ.பல லட்சம் மதிப்பிலான நிலங்கள் சங்கங்களுக்கு ஒப்படைக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



தொழிலாளர்கள் கூறியதாவது: இதுவரை 5 சங்கங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான இடங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒரு சங்கம் தனது அலுவலகத்தை மற்றொரு சங்கத்திற்கு உள்வாடகைக்கு விட்டுள்ளது. எதிர்கட்சி சார்ந்த சங்கம் பிரமாண்டமாக அலுவலகம் கட்டி 'ஏசி' வசதியுடன் செயல்படுகிறது. தற்போது ஆளும் கட்சி சார்ந்த சங்கம் ஒன்று, 560 சதுர அடிக்கு மேற்பட்ட இடத்தில் மாடி வசதியுடன் புதிய கட்டடம் கட்டும் பணிகளை துவங்கியுள்ளது.சில நாட்களுக்கு முன் இதற்காக 3200 உறுப்பினர்களின் சம்பளத்தில் இருந்து தலா ரூ.ஆயிரம் பிடித்தம் செய்து நிர்வாகமே தொழிற்சங்கத்திற்கு வழங்கியுள்ளது.



இதற்காக வளாகத்திற்குள் இருந்த 30 ஆண்டுகள் பழமையான மூன்று மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதற்கு அனுமதி பெறப்பட்டதா என தெரியவில்லை. நிலம் ஒதுக்கி கட்டடம் கட்ட நிர்வாகமும் இதுவரை வாய்மொழி உத்தரவு மட்டுமே வழங்கி வருகிறது. அலுவலகத்தில் 'ஏசி' உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கான மின்சாரம் மற்றும் குடிநீரும் போக்குவரத்து கழகத்தில் இருந்தே பெறப்படுகிறது. இவ்வகையில் மட்டும் மாதம் ரூ.பல லட்சம் நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் விரிவாக்கப் பணிகளுக்கு நிர்வாகம் சார்பில் புதிய கட்டடம் கட்டுவதும் கேள்விக்குறியாகியுள்ளது. இனிமேலாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



மாநகராட்சி அனுமதி இல்லை




மாநகராட்சி உதவி கமிஷனர் சுரேஷ் கூறுகையில், “அரசு அலுவலக வளாகத்திற்கும் புதிய கட்டடம் கட்ட மாநகராட்சியில் அனுமதி பெறுவது கட்டாயம். அரசு போக்குவரத்து கழக அலுவலகத்திற்குள் கட்டடம் கட்ட யாரும் இதுவரை அனுமதி பெறவில்லை. புதிய கட்டடம் கட்டப்பட்டால் நோட்டீஸ் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.



என்ன சொல்கிறார் நிர்வாக இயக்குனர்




மண்டல அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் திருவலம்பிள்ளை கூறுகையில், “அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்களுக்கு அலுவலக வசதி செய்து கொடுப்பது வழக்கமானது தான். தற்போது புதிய கட்டடம் கட்டுவதற்கு எனக்கு முன்னால் இருந்த அதிகாரி அனுமதி வழங்கியுள்ளார். உறுப்பினர் களிடம் பணம் பிடித்தம் செய்யப்பட்டது அவர்களின் விருப்பம் அடிப்படையில் நடந்தது” என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X