21,670! காஞ்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
06:10

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், நேற்றுடன் முடிவடைந்தது.



காஞ்சிபுரம் மாவட்டத்தின் நான்கு பதவிகளுக்கான மொத்த இடமான 2,321 இடங்களுக்கு 8,610 பேர் விண்ணப்பித்துள்ளனர். செங்கல்பட்டின் 3,208 இடங்களுக்கு 13,060 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், அக்., 6, 9ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கி, நேற்றுடன் நிறைவடைந்தது.முதல் நான்கு நாட்கள், மந்தமாகவே வேட்புமனு தாக்கல் நடந்தது; பல ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.மனு தாக்கல்கடந்த மூன்று நாட்களாக ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள், அலுவலகங்களில் மனு தாக்கல் செய்தனர்.காஞ்சிபுரம் ஒன்றிய அலுவலகத்தில் குவிந்த கூட்டத்தால், போலீசார் சலிப்படைந்தனர். வேட்பாளர் மற்றும் முன்மொழிபவரை தவிர, பலரும் உள்ளே சென்றனர். தி.மு.க., சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பலர் மனு தாக்கல் அளிக்க வந்ததால், உள்ளே செல்வதில் தள்ளுமுள்ளு நடந்தது.வேட்பாளர்கள், பகுதி மக்களை உடன் அழைத்து வந்ததால் சிறுகாவேரிபாக்கம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நெரிசல்திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகம் பஸ் நிலையம், ரவுண்டானா பகுதி அருகே இருப்பதால், நேற்று குவிந்த வேட்பாளர்கள், ஆதரவாளர்களால், செங்கல்பட்டு - திருப்போரூர் சாலையில் நெரிசல் ஏற்பட்டது. அரசியல் கட்சியினர் கூட்டத்தால் சாலையே ஸ்தம்பித்து களேபரமானது.பலரும் மேளதாளங்களுடன் பட்டாசு வெடித்து, நுாற்றுக்கணக்கான வாகனங்களில் ஆட்களை கூட்டி வந்தனர். போலீசார், தேர்தல் விதிகளை விளக்கி, கூட்டத்தை தடுத்து நிறுத்த பெரும்பாடுபட்டனர்.மதியம், 12:00 மணி முதல் 1:30 மணி வரை ராகு காலம் இருந்ததால் சில வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யாமல் காத்திருந்தனர்.திருக்கழுக்குன்றத்தில் அ.தி.மு.க., வேட்பாளர்கள், முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக வந்து வேட்புமனு அளித்தனர்.மதுராந்தகம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியங்களில், ஆறு நாட்களைவிட நேற்று, அதிக அளவிலான நபர்கள் மனு தாக்கல் செய்தனர்.மதுராந்தகத்தில் ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு போட்டியிட வந்த சிலர், விதிமுறைகளுக்கு மாறாக பலர் உள்ளே செல்ல அனுமதி கேட்டதால், போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.போலீஸ் பாதுகாப்புகாட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வண்டலுார் டி.எஸ்.பி., சிங்காரவேலன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த, போலீசார் இரு சோதனைச்சாவடி அமைத்திருந்தனர். அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் பார்வையாளர் சம்பத், தேர்தல் அலுவலர்களிடம் வேட்பு மனு தொடர்பாக ஆய்வு செய்தார்.வேட்புமனுக்கள் மீதான கூர்ந்தாய்வு அந்தந்த ஒன்றியங்களில் இன்று நடைபெற உள்ளது. வரும் 25ம் தேதி, வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். கீழ் கொடுக்கப்பட்ட புள்ளி விபரம் இரு மாவட்ட நிர்வாகத்தால் உத்தேசமாக வழங்கப்பட்டது.அதிகாரிகள் வேற 'லெவல்'தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. அன்று முதலே, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் அகற்றப்படும். குறிப்பாக, வேட்புமனு பெறும் அலுவலகங்களில் முதல்வர் படமோ அல்லது முன்னாள் முதல்வர் படங்கள் கட்டாயம் அகற்றப்படும். காஞ்சிபுரம் ஒன்றியம் மாகரல் ஊராட்சியில் முதல்வர் ஸ்டாலின் படம் அகற்றாமலேயே, உதவி தேர்தல் அலுவலர்கள் நேற்று, வேட்பாளர்களிடம் வேட்புமனு பெற்றனர். மாகரல் மட்டுமல்லாமல், பல ஊராட்சிகளில் முதல்வர் ஸ்டாலின் படங்கள் மனு பெறப்பட்டது, தேர்தல் விதியை கேலிக்கூத்தாக்கியது.வேட்பு மனு தாக்கல் துளிகள்l வேட்பு மனு தாக்கலின் இறுதி நாளான நேற்று தான், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் நடத்தை விதிகளை முறையாக பின்பற்றினர்l மருதம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தயாளமூர்த்தி, தன்னுடன் வந்த ஆதரவாளர்களுக்கு, அரசால் தடை செய்யப்பட்ட 10 ரூபாய் குளிர்பான பாட்டிலை வழங்கினார்l உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே இருந்த டீக்கடை, குளிர்பான கடைகள், ஜெராக்ஸ் கடைகள் போலீசாரின் உத்தரவுப்படி மூடப்பட்டன சீசன் நேர விற்பனை என்பதால், வாட்டர் பாட்டில், குளிர்பானம் போன்றவை மொபைல் வேன்களில் வைத்து பெட்டி, பெட்டியாக விற்பனை செய்யப்பட்டனl வேட்புமனு தாக்கலுக்கு பெருநகரில் இருந்து வந்த, அரசியல் கட்சியினரின் ஆதரவாளர்கள் முக கவசம் அணியாமல் இருந்தனர்l வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றதால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் பிரதான நுழைவாயிலை சரியாக மாலை, 5:00 மணிக்கு இழுத்து மூடினர்l திருப்போரூர் அடுத்த தண்டலம் குளக்கரையில் வசிக்கும் 'பூம்பூம்' மாட்டுக்காரர் குடும்பத்தினர், வேட்புமனு தாக்கலுக்கு வந்த வேட்பாளர்களுடன், தாமாகவே சேர்ந்து மேளம், நாதஸ்வரம் வாசித்தனர். அவர்களுக்கு வேட்பாளர்கள் பணம் அளித்தனர்.


- நமது நிருபர் குழு -


 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X