அரசு பஸ்களில் பேட்டரி திருட்டில் ஈடுபட்டவர் கைது; தொழிலாளர்களிடம் விசாரிக்கவும் முடிவு | மதுரை செய்திகள் | Dinamalar
அரசு பஸ்களில் பேட்டரி திருட்டில் ஈடுபட்டவர் கைது; தொழிலாளர்களிடம் விசாரிக்கவும் முடிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
06:11

மதுரை : மதுரையில் அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகங்களில் பஸ் பேட்டரிகளை திருடிய சாக்கிலிபட்டி வடிவேலை 39, போலீசார் கைது செய்தனர்.

செக்கானுாரணி, திருப்பரங்குன்றம், டி.கல்லுப்பட்டி கிளை அலுவலகங்களில் இரவில் பஸ் பேட்டரிகள் அடுத்தடுத்து திருடு போயின. இவை நள்ளிரவு 1:00 முதல் 2:00 மணிக்குள் நடந்தது. கடைசியாக புதுக்குளம் கிளையில் 'ஏசி' பஸ்ஸில் நான்கு பேட்டரிகள் திருடிய வடிவேலை கண்காணிப்பு கேமரா உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது: வடிவேலு ஆடு திருட்டு வழக்கில் கைதாகி செக்கானுாரணி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார். அப்போது அங்கிருந்த கிளையில் பேட்டரி திருட்டை துவக்கியுள்ளார். தனியார் பஸ், கார்களிலும் கைவரிசையை காட்டியுள்ளார். புதுக்குளம் கிளையில் திருடி சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. பேட்டரிகளை திருடி போஸ் என்பவரிடம் விற்றுள்ளார். அவரையும் விரைவில் கைது செய்வோம் என்றனர்.


தொழிலாளர்கள் உடந்தையா


புதுக்குளம் கிளையில் டூவீலரில் நள்ளிரவு 2:35 மணிக்கு உள்ளே வரும் வடிவேல், 3:03 மணிக்கு பேட்டரிகளை திருடி வெளியேறுவது கேமராவில் பதிவாகியுள்ளது. ஒரு பேட்டரியை பஸ்ஸில் இருந்து கழட்டுவதற்கு டெக்னீஷியன்களுக்கே குறைந்தது அரை மணிநேரத்திற்கு மேல் ஆகும். ஆனால் வடிவேல் உள்ளே சென்று 25 நிமிடங்களுக்குள் நான்கு பேட்டரியையும் திருடியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடிவேல் வருவதற்கு முன்பே பேட்டரிகளை சிலர் கழட்டி தயாராக வைத்திருந்தனரா என்ற கோணத்தில் தொழிலாளர்களிடமும் விசாரிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X