ஒரத்துார் நீர்த்தேக்க கரை உடைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
06:11

ஸ்ரீபெரும்புதுார்-ஒரத்துார் நீர்த்தேக்கத்தின் தற்காலிக கரை உடைந்து வெளியேறிய நீரால் 250 ஏக்கர் விவசாய நிலம் நீரில் மூழ்கியது.காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த ஒரத்துார் அருகே, அடையாறு கால்வாயின் கிளை கால்வாய் துவங்குகிறது.இந்த கால்வாய் இடையே உள்ள ஒரத்துார் ஏரி மற்றும் ஆரம்பாக்கம் ஏரியை இணைத்து, நிரந்தர வெள்ளத்தடுப்பு பணியின் கீழ் 55.85 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி 2019ல் துவங்கியது. இந்த நீர்தேக்கத்தில் 763 ஏக்கர் பரப்பில் 750 மி.க.அடி கொள்ளளவு நீரை தேக்கி வைக்க முடியும்.இணைப்பு கால்வாய்மேலும், ஒரத்துார் நீர்த்தேக்கத்தில் இருந்து அம்மணம்பாக்கம், படப்பை, மணிமங்கலம் ஏரிக்கு நீர் செல்லும் வகையில் இணைப்பு கால்வாய் அமைக்கப்படுகிறது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிக்க வேண்டிய நீர்த்தேக்க பணிகள் இதுவரை முடியவில்லை.கட்டுமான பணிகள் நடக்கும் மதகு அருகே அமைக்கப்பட்ட தற்காலிக கரை, நேற்று முன்தினம் இரவு முழுதும் பெய்த கனமழையால் உடைந்து, தண்ணீர் வெளியேறி வருகிறது.ஒரத்துார் கிராம விவசாயிகள் கூறியதாவது:கடந்த 10 நாட்களுக்கு முன் 250 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிட்டோம். இதற்காக ஏக்கருக்கு 10 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.இந்நிலையில், ஒரத்துார் நீர்த்தேக்கத்தின் தற்காலிக கரை உடைந்து வெளியேறிய தண்ணீர் விவசாய நிலத்தில் தேங்கியதால், அனைத்து நெல் பயிறும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நீர்த்தேக்க மதகில் இருந்து ஒரத்துார் ஏரி இடையே 420 மீட்டர் துாரத்திற்கு கரை அமைக்கும் பணிக்கு 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்.சீரமைப்புவருவாய் துறையினர் நிலத்தை கையகப்படுத்தி ஒப்படைத்த பின், விரைவாக கரைகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.நீர்த்தேக்க கட்டுமான பணி நடப்பதால், அதை ஒட்டிய பகுதிகளில் தற்காலிகமாக விவசாயம் செய்ய வேண்டாம் என, விவசாயிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தோம். அதை மீறி அவர்கள் செய்துள்ளனர். தற்காலிக கரை உடைந்த பகுதி, விரைந்து சீரமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X