'வாட்ஸ் ஆப்' குழுவில் பிரசாரம் துவக்கம் | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
'வாட்ஸ் ஆப்' குழுவில் பிரசாரம் துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
06:15

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. இதனால் வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதில் ஈடுபட்டுள்ளது. என்னென்ன வகைகளில் பிரசாரம் செய்யலாம் என அனைவரும் யோசித்து வருகின்றனர்.முதற்கட்டமாக நண்பர்கள், உறவினர்கள், தெருக்காரர்களின் மொபைல் போன் எண்களை சேகரித்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் சேர்த்து, 'வாட்ஸ் ஆப்'பில் ஒரு குழு ஏற்படுத்தி, பிரசாரத்தை துவக்கியுள்ளனர்.தங்களை ஆதரிக்கும் வகையில், புகைப்படங்கள், வாக்குறுதி மற்றும் வெற்றி பெற்றால் இதையெல்லாம் செய்வேன் என உறுதிமொழிகளை, குழுவில் பதிவிட்டு ஓட்டுகளை சேகரிக்கின்றனர்.இதேபோல் 'பேஸ்புக்' தளத்திலும் தெரிந்தோரிடம் ஓட்டு சேகரிக்கின்றனர். வேட்பாளரின் இந்த பதிவு அனைவராலும் கவனிக்கப்படுகிறது.வீடுகளுக்குச் சென்று ஓட்டு சேகரிக்கும்போது, அந்த வேட்பாளர் யார், எந்த கட்சி என்பன குறித்து முன்னரே அறிந்து கொள்ள, வாக்காளர்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X