ரயில்வே ஸ்டேஷன் ஸ்டாப்பில் விபத்து அபாயம் தினமும் அச்சத்தில் பயணிகள் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
ரயில்வே ஸ்டேஷன் ஸ்டாப்பில் விபத்து அபாயம் தினமும் அச்சத்தில் பயணிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
06:16

திருப்பூர் : ரயில்வே ஸ்டேஷன் ஸ்டாப்பில், பஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.திருப்பூர் நேரு வீதி, மேம்பாலத்தின் ஒரு பகுதி, ஜெய்வாபாய் பள்ளி ரோடு, காதர்பேட்டை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் ரயில்வே ஸ்டேஷன் ஸ்டாப்பில் சந்திக்கின்றன.



நிழற்குடை அமைத்து, பஸ் நிற்க தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால், அங்கு விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால், பெண்கள் சற்று நகர்ந்து பெரியார், அண்ணா நினைவிடம் முன் வந்து நிற்கின்றனர்.நேரு வீதியில் இருந்து புஷ்பா ஸ்டாப், அவிநாசி ரோடு, பி.என்., ரோடு செல்லும் கனரக வாகனங்கள் வளைவில் வேகமாக திரும்பும் போது, பாதசாரிகள், பஸ்சுக்கு நிற்பவர் மீது மோதுவது போல் வருகிறது.குமரன் நினைவிடம் வழியாக ஜெய்வாபாய் பள்ளி ரோட்டுக்கு செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதால், சாலை கடக்கும் போது, பயணிகள் மீது பஸ் மோதிவிடுமோ என்ற அச்சம் உள்ளது.நிழற்குடை இருக்குமிடத்தில் விளக்கை எரிய செய்ய வேண்டும். பஸ்களை வளைவில் நிறுத்தாமல் ஒரமாக நிழற்குடை, ஸ்டாப் உள்ள இடத்தில் மட்டுமே நிறுத்த டிரைவர்களுக்கு உத்தரவிட வேண்டும். தினமும், 2000 பயணிகள் இங்கு நின்று பஸ் ஏறி, பஸ் விட்டு இறங்கி பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.'பீக் ஹவர்ஸில்' போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு நெரிசல் ஏற்படாத வகையில் ஒழுங்குபடுத்த வேண்டும்.பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கும் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X