தொழிலாளர் குடியிருப்பு வசதி வேண்டும்! ஆலோசனை கூட்டத்தில் முறையீடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
06:16


திருப்பூர் : தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் கைகொடுக்க வேண்டும் என, நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



ஏற்றுமதி இலக்கை அடைவது குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. திருப்பூரிலிருந்து, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் பங்கேற்று, கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.அதில், ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் பேசியதாவது:ஆயத்த ஆடை ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக, ஏ.இ.பி.சி., மற்றும் பியோ (இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு) சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.துாதரக அதிகாரிகள் உதவியுடன், வெளிநாட்டு வர்த்தகர்- இந்திய ஆடை ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. வர்த்தக வாய்ப்புக்களை வசப்படுத்துவதற்காக, மெய்நிகர் கண்காட்சி தளம் செயல்படுத்தப்படுகிறது.



நாட்டின் மொத்த ஏற்றுமதி வர்த்தகம், 30 லட்சம் கோடி என்கிற இலக்கை அடைய முழு வீச்சில் செயல்படுகிறோம்.இவ்வாறு, அவர் பேசினார்.ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் பேசியதாவது:ஜவுளித்துறைக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. இந்த துறையை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். பின்னலாடை உற்பத்தி நகரான திருப்பூரில், தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த, மத்திய மாநில அரசுகள் கைகொடுக்க வேண்டும்.மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்பில், திருப்பூர் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழக அரசு நிர்ணயித்துள்ள ஏற்றுமதி வர்த்தக இலக்கை விரைவில் அடைய முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X