பிரசவ வார்டுக்கு தேசிய தரச்சான்று; கம்பம் அரசு மருத்துவமனை தீவிரம் | தேனி செய்திகள் | Dinamalar
பிரசவ வார்டுக்கு தேசிய தரச்சான்று; கம்பம் அரசு மருத்துவமனை தீவிரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
07:32

கம்பம் : கம்பம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டுக்கு தேசிய தரச்சான்று பெற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



தேனி மாவட்டம் பெரியகுளம், கம்பம் அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரம் பிரசவம் பார்க்க 'சீமாங் சென்டர்' அந்தஸ்து உள்ளது. தேவையான டாக்டர்கள், மயக்கவியல் நிபுணர், ஆக்சிஜன், ரத்த வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. கம்பம் மருத்துவமனையில் மட்டும் மாதம் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு குழந்தைகள் பிறக்கின்றன. குறிப்பாக கேரளா பெண்கள் அதிகஅளவில் வருகின்றனர்.

இதனால் தேசிய தரச்சான்றுக்கு கம்பம் அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டு தேர்வானது. டில்லி தேசிய தரச்சான்று துறையினர் கடந்தாண்டு ஆய்வு செய்து மதிப்பெண்கள் வழங்கினர். ஆனால் கொரோனா பரவலால் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தது. இதனால் மீண்டும் ஆய்வுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மருத்துவ அலுவலர் ஜெ.பொன்னரசன் கூறுகை யில், 'பிரசவ வார்டிற்கு தரச்சான்று பெறுவதற்கான பணிகள் துவங்கியுள்ளது. விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது' என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X