கூடலூர் : கூடலூர் நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கமிஷனர் சேகர் தலைமையில், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. வார்டு 1 முதல் 5 வரை 793 பேருக்கு இக்குடிநீர் வழங்கப்பட்டது. தொடர்ந்து மற்ற வார்டுகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் அலையை தடுப்பதற்காக முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.