குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர் நியமிப்பதற்கான நடைமுறை இன்று மாலை நடக்கிறது | தேனி செய்திகள் | Dinamalar
குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர் நியமிப்பதற்கான நடைமுறை இன்று மாலை நடக்கிறது
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
07:36

தேனி : தேனி குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கூட்டுக்குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகளுக்கு 26 ஒப்பந்ததாரர்களை நியமிப்பதற்கான நடைமுறை, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவால் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டு இன்று(செப்.,23) மாலை 3.00 மணி முதல் 3.30 மணிக்குள் நடக்கிறது.



தேனி குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளில் தென்கரை, தாமரைக்குளம், வடுகப்பட்டி பேரூராட்சிகள், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உட்பட 26 இடங்களில் பராமரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்ததாரர்களை நியமிக்க தேனி குடிநீர் வடிவால் வாரிய அலுவலகத்தில் ஏற்கனவே ஒப்பந்த புள்ளி விபரங்கள் அடங்கிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விண்ணப்பம் மீதான பரிசீலனை செப்.,15க்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின், செப்., 23க்கு தள்ளிப்போனது.நேற்று நடந்த ஒப்பந்தப்புள்ளி பரிசீலனை கூட்டத்தில் 24க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். இறுதியில் ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான கூடுதல் அவகாசம் வழங்க வலியுறுத்தி ஒப்பந்ததாரர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசரகால மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம் ஒருநாள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. இதனால் நேற்று நடந்த ஒப்பந்தப்புள்ளி விண்ணப்ப பரிசீலனைக் கூட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று மாலை 3.00 மணி முதல் 3.30 மணி வரை கூட்டம் நடக்க உள்ளது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X