பழநி : பழநி வனப்பகுதியில் யானைகள் உணவுக்காக தீவனப்புல் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
பழநி வனப்பகுதி பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் மான், சிறுத்தை யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. வனப் பகுதியை ஒட்டிய விளை நிலங்களுக்குள் யானைகள் அவ்வப்போது உணவுக்காக வருவது வழக்கமாக உள்ளது. விலங்குகள் நடமாட்டத்தால் விளைபொருட்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க வனப்பகுதி விளைநிலங்களில் சூரிய மின்வேலி அமைத்து உள்ளனர்.மேலும் வனப்பகுதியில் தீவனப்புற்கள் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 'தீவனப்புற்கள் முழுவதும் வளர்வதற்கு முன் யானைகள் அவற்றை சேதப்படுத்தி விடுவதால் திட்டம் முழுமையடையாமல் பாதிக்கப்பட்டுள்ளது' என அப்பகுதியினர் கூறுகின்றனர். இதற்கு தீர்வு காண வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.