ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் ஆலோசனை | தேனி செய்திகள் | Dinamalar
ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் ஆலோசனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
07:39

தேனி : தேனி மாவட்டத்தில் 2 ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு ஊராட்சி தலைவர், 6 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அக்., 9ல் தேர்தல் நடக்கிறது.



இதுதொடர்பாக மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் பாஸ்கரன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.கலெக்டர் முரளீதரன் முன்னிலை வகித்த இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாஸ்கரன் பேசியதாவது: ''தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடியில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். வாக்குச்சாவடிக்கான அடிப்படை வசதி, ஓட்டு இயந்திரங்கள் தயாராக உள்ளதா, ஊழியர்கள் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தேர்தல் தொடர்பான புகார்களை வாக்காளர்கள், வேட்பாளர்கள் 93631 42313 எனது அலைபேசி எண்ணுக்கு தெரிவிக்கலாம்'' என்றார்.இந்த கூட்டத்தில் எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்ரே, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கும் அறையை ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் பாஸ்கரன், கலெக்டர் முரளீதரன் ஆய்வு செய்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X