கம்பம்: கம்பத்தில் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் டூவீலர்களில் ஒரு கும்பல் பெட்ரோல் திருடுகிறது.கம்பம் காந்திநகர் காலனி, வரதராசபுரம், மணிநகரம், சி.எம்.எஸ்.நகர், ராஜீவ் நகர், ரேஞ்சர் ஆபீஸ் ரோடு, தியாகி வெங்கடாசலம் தெரு, குட்டியாபிள்ளை தெரு உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் பெட்ரோல் திருட்டு அரங்கேறியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. போலீசார் புகார் வாங்க மறுக்கின்றனர். இதனால் இரவு நேர ரோந்தை தீவிரப்படுத்த எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்ரே நடவடிக்கை எடுக்க வேண்டும்.