தரமில்லாத உணவு பொருட்கள்; உணவு பாதுகாப்பு துறை அலுவலர் எச்சரிக்கை | தேனி செய்திகள் | Dinamalar
தரமில்லாத உணவு பொருட்கள்; உணவு பாதுகாப்பு துறை அலுவலர் எச்சரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
07:53

தேனி: தேனி மாவட்டத்தில் தரமில்லாத உணவு பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கூறினார்.



மாவட்டத்தில் ஓட்டல், பேக்கரி, மளிகை, டீக்கடை, உணவு தயாரிப்பு நிறுவனங்கள் துவங்க உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்துக்கு அதிகமெனில் உரிமமும், அதைவிட குறைவாக இருந்தால் உணவு பாதுகாப்பு துறையின் பதிவு சான்றிதழும் கட்டாயம் பெற வேண்டும். தேனி மாவட்டத்தில் உரிமம் பெற்று ஓட்டல், பேக்கரி, மளிகை, டீக்கடை, உணவு தயாரிப்பு நிறுவனங்கள் 1173, பதிவு சான்றிதழுடன் 11,418 செயல்பட்டு வருகின்றன.

இதுபற்றி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ராகவன் கூறுகையில், ''ஓட்டல், பேக்கரி, உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உரிய அனுமதியுடன் இயங்க வேண்டும். மீறினால் அபராதம் விதித்து கடைகளுக்கு சீல் வைக்கப்படும். கடை, நிறுவனங்களின் சுற்றுப்புறங்கள் துாய்மையாகவும், காற்றோட்ட வசதியுடன் இருப்பதோடு, விலைப்பட்டியல் கட்டாயமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X