ஆத்தூர்: திண்டுக்கல் ரோட்டரி சங்கம் சார்பில் ஆத்தூர் காமராஜர் நகர் பகுதியில் 10 ஆயிரம் பனை விதை நடவு துவக்க விழா நடந்தது.சங்க தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். ரோட்டரி கவர்னர் பாண்டியன், பனை விதை நடவு துவக்கி வைத்தார். உறுப்பினர் லியோ உள்பட பலர் பங்கேற்றனர்.
தலைவர் மணிகண்டன் கூறுகையில், '50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்வதை இலக்காக கொண்டு பணிகள் துவங்குகிறது. கடந்த ஆண்டு காமராஜர் நீர்தேக்கத்திற்கு கரைப் பகுதியில் 10 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. தற்போது கிழக்கு கரை பகுதியில் 10 ஆயிரம் விதைகளும், நங்காஞ்சி ஆறு நீர்தேக்க பகுதியில் 30 ஆயிரம் விதைகளும், குடகனாறு கரையோர பகுதியில் 10 ஆயிரம் பனை விதைகளும் நடவு செய்யப்பட உள்ளது' என்றார்.