வடமதுரை: வடமதுரை ஒன்றியத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை காந்திராஜன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
சிக்குபோல கவுண்டன்பட்டியில் மேல்நிலை நீர்த்தொட்டி, பி. கொசவபட்டியில் துணை சுகாதார நிலைய கட்டடம், பெரும்புள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், புதுகரட்டுபட்டி, கே.குரும்பபட்டி கிராமங்களில் அங்கன்வாடி மைய கட்டடங்கள் திறப்பு விழா நடந்தன.
அழகர்நாயக்கன்பட்டியில் வண்ணக்கல் பதிப்பு, தென்னம்பட்டி ஊராட்சி அலுவலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா, தொகுதி அளவில் ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா வழங்கல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் தென்னம்பட்டியில் நடந்தது.இவ்விழாவுக்கு வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்தி ராஜன் தலைமை வகித்தார்.
ஒன்றிய தலைவர் தனலட்சுமி, நலப்பணிகள் இணை இயக்குனர் அன்புச்செல்வன், தாசில்தார் மணிமொழி, ஏ.பி.டி.ஓ., ரவீந்திரன் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி தலைவர்கள் நாராயணன், கோமதி வரவேற்றனர். ஒன்றிய கவுன்சிலர்கள் விஜயலட்சுமி, ராஜசேகர், தி.மு.க., ஊராட்சி செயலாளர் இளங்கோ, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஜீவா, இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.