பட்டிவீரன்பட்டி: சித்தரேவில் அச்சாணி தன்னார்வ நிறுவனம், நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் இணைந்து மூங்கில் தின விழா நடத்தின.
அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஊராட்சி வார்டு உறுப்பினர் நாகபாண்டி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.அச்சாணி நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராமு, 'புல் இனத்தைச் சேர்ந்த மூங்கில் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை 35 சதவீத அளவில் உறிஞ்சி, அதிகளவில் ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை 'ஆக்சிஜன் உருளை' என்கிறோம். உலகில் 1500 மூங்கில் இனங்கள் உள்ளது' என்றார்.பங்கேற்பாளர்களுக்கு மூங்கில் மரக் கன்றுகள், மூங்கிலரிசி, மூங்கில் கட்டுரை தொகுப்பு வழங்கப்பட்டது. மன்ற ஒருங்கிணைப்பாளர் கருப்பையா ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆசிரியர் சம்சாத்பானு நன்றி கூறினார்.