ஈரோடு: ஈரோட்டில், ஆதரவற்ற நிலையில் சாலை ஓரங்களில் வசிப்பவர்களை மீட்டு, மறுவாழ்வு அளித்து வரும் ஜீவிதம் பவுண்டேஷன் சார்பில், தன்னார்வலர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அமைப்பின் நிறுவனர் மனீஷா தலைமை வகித்தார். வனிதாமணி அருள்வேல், கதைகள், விளையாட்டு மூலம் சமூக சேவைக்கான கருத்துக்களை தெரிவித்தார். ராதா மனோகரன் தன்னார்வ தொண்டு செய்வதில் வரும் தடைகளை அகற்றி, சமூக சேவை செய்வது குறித்தும், ஈரோடு டவுன் எஸ்.ஐ., ராம்பிரபு தன்னார்வலர்களின் மேம்பாட்டு சிந்தனை குறித்து பேசினர். மல்லிகா உட்பட சிலர் உளவியல் ஆலோசனை வழங்கினர். 30க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.