கோபி: படுகொலை செய்யப்பட்ட கோவை இந்து முன்னணியின், மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிக்குமாருக்கு, கோபி நகர இந்து முன்னணி சார்பில் நேற்று புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். ஈரோடு மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். நகர தலைவர் குருராஜேந்திரன், நகர பொதுச்செயலாளர் சுப்பிரமணி என பலர் புஷ்பாஞ்சலி செலுத்தினர்.