வேளாண் படிப்புக்கு 36 ஆயிரம் பேர் விண்ணப்பம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
11:53

கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், இளநிலை மாணவர்கள் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' வாயிலாக இதுவரை, 36 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.





வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு கல்லுாரிகள், 28 இணைப்பு கல்லுாரிகள் செயல்படுகின்றன. இதில், 11 இளங்கலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசின் அறிவிப்பின் படி, புதிதாக துவங்கவுள்ள நான்கு கல்லுாரிகள், தமிழ் வழி படிப்புகளை சேர்த்து நடப்பாண்டில், 350 மாணவர்களுக்கு கூடுதலாக அரசு கல்லுாரிகளில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.



கடந்த 8ம் தேதி முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. நேற்றைய நிலவரப்படி, 36 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், கூடுதலாக விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாக பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



டீன் கல்யாணசுந்தரம் கூறுகையில்,''கடந்தாண்டு இதே நேரத்தில், 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தற்போது, 36 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அக்., 7 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தரவரிசை பட்டியல் அக்., 18ல் வெளியிடப்படும். புதிய நான்கு கல்லுாரிகள், தமிழ் வழி பாடப்பிரிவுகள் அரசின் உத்தரவுபடி நடப்பாண்டிலேயே நடைமுறைப்படுத்த தயார்நிலையில் உள்ளோம். கூடுதலாக, 350 இடங்களும் கலந்தாய்வில் சேர்க்கப்படும். பட்டயப்படிப்புக்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X