கோடநாடு வழக்கில் இன்று நான்கு பேரிடம் விசாரணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

23 செப்
2021
12:15
பதிவு செய்த நாள்
செப் 23,2021 12:13

ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்று மேலும் இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.



நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம், 2017ம் ஆண்டு, ஏப்., 24ம் தேதி நடந்தது. காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். சம்பவத்தின் போது, 6 பேர் கும்பல் கூடலூர் வழியாக கேரளாவுக்கு தப்பினர். அதில், சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகியோர் இருந்துள்ளனர். இவ்வழக்கில், இருவரும் ஜாமினில் உள்ளனர். நேற்று, இருவரிடம், ஊட்டி பழைய எஸ்.பி., அலுவலகத்தில் நீலகிரி எஸ்.பி., ஆஷிஷ் ராவத் தலைமையில், தனிப்படை போலீசார், 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்று இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


இந்நிலையில், இவ்வழக்கில், இன்று ஜாமினில் உள்ள, சதீஷன், பிஜின் குட்டி ஆகியோரிடமும் ஐ.ஜி., சுதாகர், டி.ஐ.ஜி., முத்துசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை குழு, தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.


கால அவகாசம்!




போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, இவ்வழக்கில் கூடுதல் தகவல் பெற அரசு சிறப்பு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் தாக்கல் செய்த மனுவை அடுத்து, ஊட்டி செஷன்ஸ் கோர்ட் நான்கு வார கால அவகாசம் அளித்து வழக்கை, அக்., 1ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. போலீசார், விசாரணைக்கு தேவைப்படும் நபர்களுக்கு சம்மன் அனுப்பி மறு விசாரணையை ஆக., 17ம் தேதி முதல் நடத்தி வருகின்றனர். இது வரை, 31 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். இதில், முக்கிய சாட்சியான கிருஷ்ணதாபாவிடம் விசாரணை நடத்த அழைத்து வர உள்ளோம். கடந்த முறை அவரை அழைத்து வந்து, இங்கு ஒரு மாதம் தங்க வைத்ததற்கு 8 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. இதுவே போலீசாருக்கு பெரும் தலைவலி. இத்தொகையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து போலீசாருக்கு தலைவலியாக உள்ளது.



இந்நிலையில், மீண்டும் நேபாளம் சென்று அவர் எங்கு வசிக்கிறார் என்பது குறித்து தேடி அழைத்து வர சிரமமாக உள்ளது. இது போன்ற பல்வேறு சிரமங்களால், மறு விசாரணைக்கான கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என கேட்க உள்ளோம். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankara Narayanan - Chennai,இந்தியா
23-செப்-202114:42:04 IST Report Abuse
Sankara Narayanan 2017 இல் நடந்தது..இன்னும் விசாரணையே சரி வர ஆரம்பிக்க வில்லை. இப்படியே கேஸை இழுத்துக்கொண்டு அடுத்த எலெகக்ஷன் வரை தள்ளி விட்டால் அதிமுக பதவிக்கு வந்தால் கேஸ் தள்ளுபடி நல்ல தமாஷையா
Rate this:
Cancel
23-செப்-202114:11:48 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் என்ன போகிற போக்கை பார்த்தல் எடப்பாடி தேர்தல் பரப்புரை க்கு போவாரா இல்லை வேறு எங்காவது போவாரா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X