ஈரோடு; ஈரோடு, ரயில்வே உதவி பொறியாளர் அலுவலகம் முன் எஸ்.ஆர்.எம்.யு., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். ரயில்வே காலனியில், நான்கு மணி நேரத்துக்கு மேலாக தொடர் மின் தடை ஏற்படுவதை கண்டித்தும், மின் வினியோகத்தை சீராக்க வலியுறுத்தியும், ரயில்வே தனியார் மயத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளை செயலாளர்கள் தர்மன், விஜய், செந்தில், கனகராஜ், பிரசாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.