துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஈரோடு வந்த முன்னாள் முதல்வர் | ஈரோடு செய்திகள் | Dinamalar
துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஈரோடு வந்த முன்னாள் முதல்வர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
12:23

ஈரோடு: துக்க நிகழ்வுக்கு ஆறுதல் கூறுவதற்காக, ஈரோட்டுக்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி வருகை புரிந்தார்.


ஈரோட்டுக்கு, நேற்று முன்னாள் முதல்வர் பழனிசாமி வந்தார். மொடக்குறிச்சி அருகே வேலம்பாளையத்தில் உள்ள என்.ஆர்.கட்டுமான நிறுவனர் ராமலிங்கம் மாமியார் மற்றும் தனது உறவினரான பாப்பம்மாள் மறைவு குறித்து, முன்னாள் முதல்வர் பழனிசாமி துக்கம் விசாரித்தார். பின் ஈரோடு பெரியார் நகர், அ.தி.மு.க., பகுதி செயலாளர் மனோகரன் தாயார் சரஸ்வதியம்மாள் மறைவை ஒட்டி, அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின், மற்றொரு பகுதி செயலாளர் கோவிந்தராஜன் குடும்ப துக்க நிகழ்ச்சியை விசாரித்துவிட்டு, சேலம் புறப்பட்டு சென்றார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், தென்னரசு, பூந்துறை பாலு, முன்னாள் அமைச்சர் ராமசாமி, முன்னாள் மேயர் மல்லிகா உட்பட பலர் பங்கேற்றனர்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X