ஏ.டி.எம்., சரிசெய்ய ஆர்ப்பாட்டம் | சேலம் செய்திகள் | Dinamalar
ஏ.டி.எம்., சரிசெய்ய ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
12:30

சங்ககிரி: தேவூரில், அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மண்டல செயலர் பெருமாள் தலைமை வகித்தார். அதில், தேவூரில் உள்ள அரசு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பழுதான ஏ.டி.எம்., இயந்திரத்தை சரிசெய்தல்; அனைவருக்கும் கடன் வழங்குதல்; தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் அடமானம் வைத்துள்ள, 10 பவுன் நகை கடனை, மத்திய அரசு தள்ளுபடி செய்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாநில தலைவர் அண்ணாதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X