வணிகக்குழு கல்வெட்டு கண்டுபிடிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
12:53

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வணிகக்குழு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், ஐகுந்தம் கிராமத்திலுள்ள கல்வெட்டை ஆய்வு செய்தனர். இது குறித்து, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைத்த, முதலாவது முழு வணிகக்குழு கல்வெட்டு இது. ஏழு அடிக்கு நான்கடி அளவுள்ள கற்பலகையின் இருபக்கமும் கோடுகள் வரைந்து எழுத்துக்களை, 40 வரிகளில் அழகாக வெட்டியுள்ளனர். மேலும், 12ம் நூற்றாண்டின் எழுத்தை கொண்ட கல்வெட்டின் முடிவில், சாமரம், பூர்ணகும்பம், குத்துவிளக்கு, பசுவும் கன்றும் உருவங்களை செதுக்கியுள்ளனர். கால்நடைகளை மீட்கும் போரில், தன்மசெட்டி, சிறியதம்பப்பன் மற்றும் இவனது தமையனும் இறந்து விட்டனர். இவர்களது உயிர் தியாகத்தை போற்றும் வகையில், 'இவ்வீரதாவளம் திருப்பெறு மாடப்பள்ளித்தளத்து ஐநூற்றுவர்' என்ற வணிகக்குழுவினரால் உருவாக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. தமிழக வணிகக்குழு கல்வெட்டுக்களில் ஐகுந்தம் வணிகக்குழு கல்வெட்டு சிறப்பிடம் பெற்றுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். தர்மபுரி அகழ்வைப்பக தொல்லியல் அலுவலர் பரந்தாமன், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X