பள்ளி மாணவி கடத்தல்: மேஸ்திரிக்கு 'போக்சோ' | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
பள்ளி மாணவி கடத்தல்: மேஸ்திரிக்கு 'போக்சோ'
Added : செப் 23, 2021 | |
Advertisement
 

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே, பள்ளி மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட, கட்டட மேஸ்திரி போக்சோவில் கைதானார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே செலசனம்பட்டியை சேர்ந்தவர் பிரபு, 29, கட்டட மேஸ்திரி; இவர், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த எட்டாவது படிக்கும், 15 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தகாத முறையில் நடந்துள்ளார். திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோரிடம் வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர்கள் மறுத்ததால் கடந்த, 16ல் மாணவியை கடத்திச்சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கடந்த, 21ல் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து பிரபுவை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X