போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே, மூத்த மகனின் திருமணம் தாமதத்தால் ஏற்பட்ட தகராறில், மனமுடைந்த பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே, கீழ்குப்பத்தை சேர்ந்தவர் முருகேசன், 50; இவரது மனைவி சாந்தாமணி, 45; இவர்களுக்கு ரவீந்திரன், 28, சூர்யா, 26, என இரு மகன்கள் உள்ளனர். சூர்யாவிற்கு ஓராண்டிற்கு முன்பு திருமணமானது. மூத்த மகன் ரவீந்திரனுக்கு பெண் பார்த்து வந்தனர். ஆனால், பெண் கிடைக்காமல் காலம் கடந்ததால், விரக்தியடைந்த ரவீந்திரன், நேற்று முன்தினம் இரவு, பெற்றோருடன் தகராறு செய்துள்ளார். இதில் மனமுடைந்த பெற்றோர் அருகிலுள்ள மயானத்துக்கு சென்று, அங்கு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். நேற்று காலை, மயானத்தில் இறந்து கிடந்த இருவரது சடலங்களையும், பாரூர் போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.