2024 லோக்சபா தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல்: பழனிசாமி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
13:01

ஓமலூர்: ''வரும், 2024ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் என தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தல் வர வாய்ப்புள்ளது,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.


சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள அ.தி.மு.க., புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தல் பணி குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. அதற்கு தலைமை வகித்த, தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் குறித்து திட்டமிடவில்லை. அந்தந்த பகுதி கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து செயல் படவுள்ளோம். கூட்டுறவு தலைவர்கள், கட்சி சார்ந்தவர்களாக தேர்வு செய்வது கிடையாது. சங்கத்தில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை. நகை தள்ளுபடி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


தள்ளுபடிக்கு நிபந்தனை: ஏனெனில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை. பிரசாரத்தின்போது, 'நீட்' ரத்து செய்யப்படும் என்றார்கள். செய்யவில்லை. அதேபோல்தான், கூட்டுறவு சங்கத்தில் மட்டும், 43 லட்சம் பேர் நகை கடன் பெற்றுள்ளனர். தள்ளுபடிக்கு பல நிபந்தனை விதித்துள்ளனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என, ஸ்டாலின் பிரசாரத்தில் தெரிவித்தார். தற்போது, கூட்டுறவு வங்கியில் மட்டும் என தெரிவித்துள்ளனர். எவ்வளவு பேருக்கு கிடைக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வரும், 2024ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் என தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தல் வர வாய்ப்புள்ளது. அ.தி.மு.க., கொண்டு வந்த, மருத்துவ படிப்பில், 7.5 சதவீதம், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு திட்டத்தை காப்பி அடித்து, தி.மு.க., அரசு, பல்வேறு படிப்புகளுக்கு நிறைவேற்றி வருகிறது.


13 பேர் மீது வழக்கு: முன்னாள், இன்னாள் அமைச்சர், 13 பேர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. ஊடகத்தினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆனால், ஆளுங்கட்சிக்கு, 'ஜால்ரா' போடும்படி உள்ளது. எதிராக செய்தி வெளியிட பயப்படுகிறீர்கள். குறிப்பாக, பல ஆயிரம் விவசாயிகள் கொண்டு வந்த, ஒரு லட்சம் நெல் மூட்டைகள், மழையால் வீணாகியுள்ளன. யாராவது செய்தி வெளியிடுகிறீர்களா? இவற்றை, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றால் தான் கொள்முதல் செய்ய ஏதுவாக இருக்கும்.


'நோட்டீஸ் வரவில்லை': 'ரெய்டு' நேரத்தில் செய்தியாளர் யார் என தெரியாமல் தாக்கப்பட்டு, பின் சரிசெய்யப்பட்டது. ஆட்சி பொறுப்பேற்று நான்கு மாதமாகிவிட்டது. அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு போடுவது, அவதூறு பரப்புவது மட்டும், தி.மு.க., கொள்கையாக செய்து வருகிறது. மக்களுக்கு நல்லது செய்ய ஸ்டாலின் அரசு முன்வரவில்லை. அ.தி.மு.க.,வுக்கு மடியில் கனம் இல்லை. வழியிலும் பயம் இல்லை. சேகர் ரெட்டி டைரி குறித்து எந்த ஆதாரம், 'நோட்டீஸ்' வரவில்லை. அ.தி.மு.க.,வில் செந்தில்பாலாஜி இருந்தபோது, சட்ட சபையில் ஸ்டாலின் குறித்து பேசியதும், அவர், செந்தில்பாலாஜி குறித்து பேசியதும் சட்டசபைகுறிப்பில் உள்ளது. அவர் மீது வழக்கு உள்ளது. யாராவது, அதுகுறித்து கேட்கிறீர்களா? இப்படிப்பட்டவர்களை அமைச்சர்களாக வைத்துள்ளது, தி.மு.க., அரசு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X