நாமக்கல்லில் நாளை மாவட்ட அளவிலான ஏற்றுமதியாளர்கள் சங்கமம், கருத்தரங்கம் | நாமக்கல் செய்திகள் | Dinamalar
நாமக்கல்லில் நாளை மாவட்ட அளவிலான ஏற்றுமதியாளர்கள் சங்கமம், கருத்தரங்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
13:09

நாமக்கல்: மாவட்டத்தில் உள்ள ஏற்றுமதியாளர்களை கண்டறிந்து. அவர்களை ஊக்குவிக்கும் வகையில், நாளை, காலை, 10:00 மணிக்கு, நாமக்கல் நல்லிபாளையம் ஓட்டல் கோஸ்டல் ரெசிடன்சியில், மாவட்ட அளவிலான ஏற்றுமதியாளர்கள் சங்கமம் நடக்கிறது. அதில், மாவட்டத்தில் உள்ள ஏற்றுமதியாளர்கள், வெளிநாட்டு வணிக அலுவலகம் இணை இயக்குனர், நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர், மாவட்ட வங்கியாளர்கள், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், ஏற்றுமதி வாய்ப்புள்ள தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி வாய்ப்புள்ள பொருட்கள் சம்பந்தமாக விரிவாக எடுத்துரைத்தும், திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்க உள்ளனர். ஏற்றுமதியாளர்கள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களின் பங்குதாரர்கள் சந்திக்கும் தொழில் ரீதியான பிரச்னைகள், இடையூறுகளை களைய ஆலோசனை வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள ஏற்றுமதி வாய்ப்புள்ள பொருட்களை ஊக்குவிக்கும் வகையில், கருத்தரங்கம் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் முனைவோரும், ஏற்றுமதியாளர்கள் சங்கமத்தில் பங்குபெற்று, தாங்கள் ஏற்றுமதியாளர் ஆவதற்கான அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகவலை, கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X