கரூர்: கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதி இல்லாமல் செல்லும் மினி பஸ்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு கொடுத்தனர். மனுவில் உள்ளதாவது: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன், ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்து, 30க்கும் மேற்பட்டவர்கள் ஆட்டோ ஓட்டி வருகிறோம். இந்நிலையில், அனுமதி இல்லாமல் சில மினி பஸ்கள், அரசு மருத்துவ கல்லூரிக்கு இயக்கப்படுகின்றன. ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, அனுமதி இல்லாமல் மினி பஸ்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.